திருச்சி ,
திருச்சி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது,
"ஒருவர் கருத்து சொல்லும் போது யாருடைய மனதும் புண்படாமல் கருத்து சொல்ல வேண்டும். ஒரு செய்தி தெரியவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும். எந்த கருத்தையும் ஆதாரம் இல்லாமல் பேசுவது, பேசிவிட்டு கடைசியில் மன்னிப்பு கேட்பது அரசியல் நாகரிகம் குறைந்து வருவதை காட்டுகிறது. காங்கிரசுக்கு என கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் உள்ளது.
எங்கள் வரலாறு பேசினாலே போதும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி பேசியது அவருடைய சொந்த கருத்து. கட்சியின் கருத்து அல்ல. எங்களது கொள்கை காந்திய கொள்கை, மது இல்லா தமிழகம் என்பது தான் எங்கள் இலக்கு. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. காமராஜரை காங்கிரசால்தான் சொந்தம் கொண்டாட முடியும். தமிழகத்திலும் கூட்டணி இரும்பு கோட்டையாக உள்ளது என்றார்."