கிருஷ்ணகிரி, பிப்.5: பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கூட்ரோடு அருகே தனியார் கிரானைட் கம்பெனியில் மேற்பார்வையாளராக தர்மாள்(45) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை, கம்பெனியில் இருந்த போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அங்கு வைத்திருந்த ₹8 ஆயிரம் மதிப்பிலான 80 மீட்டர் காப்பர் ஒயரை திருடிச்செல்ல முயன்றார். அவரை அங்கிருந்தவர்களின் உதவியுடன் தர்மாள் பிடித்து, பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நல்லகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகன்(43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
The post காப்பர் ஒயர் திருடியவர் கைது appeared first on Dinakaran.