காந்தி, நேதாஜி சிலை பீடங்களில் பராமரிப்பு பணி நகர்மன்றத்தலைவர் தகவல்

3 months ago 21

 

சிவகங்கை, அக். 4: சிவகங்கை அரண்மனைவாசலில் உள்ள மகாத்மா காந்தி, நேதாஜி சிலை பீடங்கள் பராமரிக்கப்பட உள்ளதாக நகர்மன்றத்தலைவர் தெரிவித்தார். சிவகங்கை அரண்மனைவாசல் எதிர்ப்புறம் மகாத்மா காந்தி மற்றும் நேதாஜி சிலைகள் உள்ளன. காந்தி சிலை உள்ள இடத்தில் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இருப்பு படிக்கப்பட்டுகள் உள்ளன. செங்குத்து வடிவில் இரண்டு அடி அகலம் மட்டுமே உள்ள இப்படிகளில் ஏறி சிலைக்கு மாலை அணிவிக்க கடுமையான சிரமம் ஏற்படுகிறது.

இதையடுத்து இப்படிகளை அகற்றிவிட்டு அகலமான புதிய படிகள் அமைக்கவும், பீடங்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுபோல் நேதாஜி சிலை பீடங்கள் உடைந்த நிலையிலும், மேற்கூரை சிதைந்த நிலையிலும் உள்ளது. இவைகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சிலைகளை ஆய்வு செய்த நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவித்ததாவது:நேதாஜி சிலை பராமரிப்பு பணி ரூ.7லட்சத்தில் நடைபெற உள்ளது.

பீடம் அமைத்தல், கான்கிரீட் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளன. காந்தி சிலை பராமரிப்பு பணிக்கு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேதாஜி சிலை அருகில் உள்ள போக்குவரத்து போலீஸ் அமரும் வகையில் உள்ள பெட்டி அகற்றிக்கொள்ளவும், இப்பெட்டியை நேரு பஜார் நுழைவுப்பகுதியில் வைத்துக் ்கொள்ளவும் அறவுறுத்தப்பட்டுள்ளது. பெட்டி அகற்றப்படாததால் சிலை பராமரிப்பு பணி செய்வதில் தாமதமாகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post காந்தி, நேதாஜி சிலை பீடங்களில் பராமரிப்பு பணி நகர்மன்றத்தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article