நிலக்கோட்டை, ஜன. 23: சின்னாளபட்டி அருகேயுள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை சார்பில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஆய்வு மைய துவக்க விழா மற்றும் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். கிராமிய கலைகள் புல முதன்மையர் முத்தையா, பல்கலை பதிவாளர் (பொ) பேராசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். இலங்கை முன்னால் எம்பி பத்மினி சிதம்பரநாதன் ஆய்வு மையத்தை துவங்கி வைத்தார். நார்வே ஓஸ்லோ பல்கலைக்கழக சமூகவியல் மற்றும் மானுட புவியியல் துறை முன்னாள் பட்ட ஆய்வாளர் சர்வேந்திரா தர்மலிங்கம் உள்பட பலர் பேசினர்.
இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நாடகத்துறை முன்னாள் தலைவர் சிதம்பரநாதன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழி துறை விரிவுரையாளர் செல்வகுமாரி சிவலிங்கம், ஹாங்காங் தமிழ் பண்பாட்டு இயக்க தலைவர் சித்ரா, லண்டன் எழுத்தாளர் ரவி அருணாசலம், இலங்கை கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப கலைகள் துறை விரிவுரையாளர் கவிஞர் கலைமகள், விமர்சகர் முருகேசபாண்டியன், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் தமிழ் துறை தலைவர் ராமசாமி, பல்கலை நுண்கலைகள் துறை பேராசிரியர் கேசவராஜராஜன், இந்தி துறை தலைவர் பேராசிரியர் மொகல் சலீம்பெய்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார்.
The post காந்தி கிராம பல்கலையில் பன்னாட்டு கருத்தரங்கம் appeared first on Dinakaran.