
சென்னை,
காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, ரிஷப் ஷெட்டி புது அவதாரத்துடன் மீண்டும் வந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா: சாப்டர் 1 (காந்தாரா 2) பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான அளவில் உருவாகி வருகிறது.
இந்நிலையில், ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில், போர்வீரராக கோடரி மற்றும் கேடயத்தை கையில் ஏந்தியபடி ரிஷப் ஷெட்டி ஓடி வரும் படியும், அவரின் பின்புறம் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த அனல் பறக்கும் காட்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. பான் இந்திய அளவில் உருவாகி இருக்கும் காந்தாரா: சாப்டர் 1 பெங்காலி மொழியிலும் வெளியாகிறது. இதன் மூலம் இன்னும் அதிக அளவில் மக்களை இப்படம் சென்றடையும்.
இப்படம் அக்டோபர் 2 அன்று திரைக்கு வர உள்ளநிலையில், படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. வரும் நாட்களில் ரசிகர்கள் மேலும் அற்புதமான அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.