
நகரி,
தெலுங்கானா மாநிலம் மிர்யாளகுடாவில் உள்ள பொக்கனுந்தலபாடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லீஸ்வரி (வயது 27). ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இவர் கடந்த 4 ஆண்டுகளாக அதே கிராமத்தை சேர்ந்த ஜனா ரெட்டி என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜனா ரெட்டியின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜனா ரெட்டிக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர்.
இதனையடுத்து ஜனா ரெட்டி பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதை தினந்தோறும் நினைத்து பார்த்து மனமுடைந்த மல்லீஸ்வரி, சம்பவத்தன்று தனக்குத்தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லீஸ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜனா ரெட்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.