காணும் பொங்கலன்று சென்னை கடற்கரையில் காணாமல் போன 19 குழந்தைகள் மீட்பு: போலீஸ் தகவல்

2 weeks ago 4

சென்னை: காணும் பொங்கலன்று சென்னை கடற்கரையில் காணாமல் போன 19 குழந்தைகள் மீட்கப்பட்டனர் என போலீஸ் தெரிவித்துள்ளது. அண்ணா சதுக்கம், மெரினா, நீலாங்கரை வரை 19 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோரின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை குழந்தைகளின் கையில் கட்டப்பட்டன. ட்ரோன் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு குற்ற சம்பவம் நிகழாவண்ணம் கண்காணிக்கப்பட்டது. திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எதுவும் நிகழாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post காணும் பொங்கலன்று சென்னை கடற்கரையில் காணாமல் போன 19 குழந்தைகள் மீட்பு: போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article