திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு என பரவும் தகவல் வதந்தியே: உண்மை சரிபார்ப்பகம்

2 hours ago 1

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு என பரவும் தகவல் வதந்தியே என உண்மை சரிபார்ப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கம்போல் இன்று காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் முறையாக நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளதாவது;

பொய்:
மதுரையில் 144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது

உண்மை என்ன? ;-
“இன்று 04.02.2025 வழக்கம்போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் முறையாக நடைபெற்று வருகின்றது. மேலும், திருக்கோயிலில் தைத்தெப்பதிருவிழா சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. பக்தர்கள் வழக்கம்போல் எவ்வித இடர்பாடுமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.” என்று கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.

The post திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு என பரவும் தகவல் வதந்தியே: உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Read Entire Article