வேலூர், மார்ச் 1: மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக வடக்கு ரயில்வேயின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட நாட்களில் 8 ரயில் சேவைகளை தென் மத்திய ரயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது. அதன்படி, இரவு 7.10 மணிக்கு திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 67209 மெமு பாசஞ்சர் ரயில் இன்று முதல் வரும் 7ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், காலை 6.10 மணிக்கு காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 67206, திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு காலை 10.35 மணிக்கு புறப்படும் வண்டி எண் 67207, காட்பாடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 67208 ஆகிய 3 மெமு பாசஞ்சர் ரயில்கள் நாைள மார்ச் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post காட்பாடியில் இருந்து செல்லும் 2 பாசஞ்சர் மெமு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.