
சென்னை,
சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிர்வாகம் ஒன்று லண்டனில் இருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் வெள்ளி கட்டிகளை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து லாரியின் மூலம் அந்த தனியார் நிறுவனத்திற்கு ஏற்றிச்சென்றது.
இந்த நிலையில் இதில் கொண்டுவரப்பட்ட 922 கிலோ அளவிலான 30 வெள்ளி கட்டிகள் மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கண்டெய்னரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை தனியார் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் அனுப்பப்பட்டதை அடுத்து இரண்டு முறை கண்டெய்னர் திறக்கப்படிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் வெள்ளி கட்டிகள் மாயமானது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 30 வெள்ளி கட்டிகளின் மதிப்பு ரூ. 9 கோடியாகும். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.