காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்: த.வா.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் பேச்சு

3 weeks ago 5

சென்னை : வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும் என்று த.வா.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசினார். காட்டுப்பன்றிகளை கொல்ல உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என மதிமுக எம்.எல்.ஏ. ரகுராமன் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, “வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது ஒன்றிய அரசுதான். இந்த பட்டியலின்படிதான் காட்டுப் பன்றி, வனவிலங்காக உள்ளது. காப்புக் காடுகளில் இருந்து ஒரு கி.மீ தூரம் வரை வரும் காட்டுப் பன்றிகளை கொல்ல அனுமதி இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்: த.வா.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article