காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ரெய்டு கணக்கில் வராத ₹60,000 பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

3 weeks ago 6

காஞ்சிபுரம், அக்.24: காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு, கணக்கில் வராத ₹60 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், அலுவலக ஊழியர்கள், வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்திற்கு வந்த பயனாளிகள் சிலர் என அனைவரிடமிருந்து ₹60 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அருகில் இருந்த கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ரெய்டு கணக்கில் வராத ₹60,000 பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article