சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு அனுபவப் பகிர்வு போட்டி நடத்தப்படும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காசி தமிழ் சங்கமம் என்பது இந்தியாவின் இரு பண்டைய அறிவு மையங்களான காசி, தமிழகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார தொடர்பை மீட்டெடுக்கவும், வலுப்படுத்தவும் பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும். இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிப்.15 முதல் 24-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.