காங்கோவில் படகு விபத்து: 50 பேர் பலியான சோகம்

1 day ago 3

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் வடமேற்கு பகுதியில் மடான் குமு துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். இதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் 100-க்கும் மேற்பட்டவர்களை லேசான காயத்துடன் மீட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. படகில் பெண் ஒருவர் சமையல் செய்த போது தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

Read Entire Article