காங்கயம் நகராட்சியில் 13 டன் குப்பைகள் அகற்றம்

3 months ago 18

 

காங்கயம், அக்.15: காங்கயம் நகரில் ஆயுதபூஜை குப்பைகள் பல இடங்களில் குவிந்து கிடந்தது. மொத்தம் 13 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. காங்கயம் நகராட்சிக்குட்பட்ட திருப்பூர் ரோடு, கடைவீதி,சென்னிமலை ரோடு,கோவை ரோடு, முத்தூர் ரோடு பிரிவு உள்பட நகரின் பல இடங்களில் ஆயுத பூஜை பொருள்கள் விற்க திடீர் சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. வாழைக்கன்றுகள், மாவிலைகள்,தேங்காய், இளநீர், வாழைப்பழம், பொரி, சூடம், திருநீறு, சந்தனம்,சிவப்பு போன்ற பூஜைப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் விற்பனையாகாத மாவிலைகள்,வாழைக் கன்றுகளை விட்டுச் சென்றுவிட்டனர்.

இத்துடன் கடைகளிலிருந்து ஏராளமான இதர குப்பைகளும் குவிந்து கிடந்தது. தவிர ஆயுத பூஜைக்காக கட்டடங்களைச் சுத்தம் செய்த போது கிடைத்த உபயோகமற்ற பொருட்களும் ஆங்காங்கே குவிந்தது. பூஜை முடிந்த பின் அதிகமாக குப்பைகள் குவிந்தது. வழக்கமாக நாள்தேறும் சுமார் 8 முதல் 10 டன் வரை குப்பைகள் அகற்றப்படும். ஆனால் ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக குப்பைகள் சேர்ந்தது. இதனால் நேற்று 13 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. அதிக அளவில் குப்பைகள் இருப்பதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post காங்கயம் நகராட்சியில் 13 டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article