காங்கயம், பிப்.25: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழகத்தில் 1000 மலிவு விலை மருந்தகத்தை துவங்கி வைத்தார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் மற்றும் ஊதியூர் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காங்கயத்தில் சிவன்மலை ஊராட்சியிலும், ஊதியூரிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
இதில் 20 முதல் 90 சதவீதம் வரை குறைவான விலையில் சித்த மருந்துகள், யுனானி, ஆயூர்வேத, நியூட்ராசூட்டிகல்ஸ், ஜெனிரீக், சர்ஜிக்கல் மருந்துகள் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், குண்டடம் வட்டம் கூட்டுறவு சார்பதிவாளர் ஈஸ்வரி, ஒன்றிய இளைஞரணி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post காங்கயம், ஊதியூரில் முதல்வர் மருந்தகம் துவக்கம் appeared first on Dinakaran.