கவின் நடிக்கும் 'கிஸ்' படத்தின் டீசர் வெளியானது

1 week ago 3

சென்னை,

படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெளியான 'லிப்ட்' , 'டாடா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.

சமீபத்தில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சதீஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளநிலையில், படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Read Entire Article