கவர்னர் பங்கேற்கும் விழா - அமைச்சர் புறக்கணிப்பு

3 months ago 14

சென்னை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.அதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்த சூழலில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், "தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னரின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து புறக்கணித்திருக்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணித்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிலையில் புறக்கணிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 

Read Entire Article