கவர்னரை சந்தித்தார் நடிகர் விஜய்

3 weeks ago 5

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கவர்னரை சந்தித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் இன்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விஜய், ‘பெண்களின் பாதுகாப்பு அவசியமாகிறது. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், விஜய், கவர்னர் ரவியை இன்று பிற்பகலில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

The post கவர்னரை சந்தித்தார் நடிகர் விஜய் appeared first on Dinakaran.

Read Entire Article