கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மோதல்

7 months ago 21

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களிடையே சாகசம் செய்வதிலும், வேகமாக செல்வதிலும் போட்டி ஏற்பட்டது. இந்த போட்டி தகராறாக மாறியது. இதனால் பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பிரிவாக பிரிந்து, சங்கராபுரம் பஸ் நிலையத்தில் மோதிக்கொண்டனர்.

மாணவர்கள் ஒருவரையொருவர் கைகளாலும், கையில் கிடைத்த பொருட்களாலும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் வியாபாரிகள் ஓடிவந்து, 2 பிரிவு மாணவர்களையும் தடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம், அருகில் உள்ள ஒரு கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது. மேலும் இந்த வீடியோவை சங்கராபுரம் போலீசார் கைப்பற்றி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார்-யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article