
நகரி,
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு ஆரூஷ் (வயது 5) உள்பட 2 மகன்கள் இருந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருண்குமார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
இந்த சூழ்நிலையில், மாதவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரிஷி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்கள் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. சிறுவன் ஆரூஷ் எப்போதும் தாயுடன் இருந்ததால், அவர்கள் உல்லாசமாக இருக்க தடையாக இருந்தது. இதன்காரணமாக மாதவி பெற்ற மகன் என்றும் பாராமல், சிறுவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கிடையே சம்பவத்தன்று இருவரும் சிறுவன் ஆரூசை இருவரும் சேர்ந்து தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்த கள்ளக்காதல் ஜோடி செய்வதறியாது திகைத்து, அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.