
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கோவிலாம்பூண்டியை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 70) 1967ல் 6 ம்வகுப்பு படிக்கும்போது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். கிராம இளைஞர்களுக்கு கல்வியின் பயனை உணர்த்தும் பொருட்டு நேரடித்தேர்வு முறையில் 2022 ம் ஆண்டில் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
பின்னர் 2024 ம் ஆண்டு நேரடி தேர்வு முறையில்10 ம் வகுப்பு எழுதினார். 3-வது முயற்சியாக 10ம் வகுப்பு தேர்வெழுதிய அவர், நடப்பாண்டில் தேர்வு எழுதி முழுமையாக 299 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து 10ம் வகுப்பு தேர்வெழுதி முதியவர் தேர்ச்சி பெற்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி வருகிறது.