
சென்னை,
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதுவரை, 10 நாட்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 634 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 53 ஆயிரத்து 624 மாணவர்கள், 48 ஆயிரத்து 514 மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 138 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.
மாணவர்கள், www.tneaonline.orgஎன்ற இணையதள பக்கத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி வரை பதிவு செய்யலாம். மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தமிழகம் முழுவதும் உள்ள 110 மாணவர் சேர்க்கை சேவை மையங்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், [email protected] என்ற இ-மெயில் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.