கல்லூரியில் கருத்தரங்கம்

2 months ago 9

சோழவந்தான், டிச. 5: சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்தா, குலபதி சுவாமி அத்யாத்மானந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் ராமர் வரவேற்றார். இதையடுத்து ராஜபாளையம் இசைக் கலைஞர் உமாசங்கர் இதயம் ஒரு கோவில் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் சதீஷ்பாபு, முத்தையா உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கல்லூரியில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article