கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி - 5 பேர் கைது.!

2 months ago 10
சென்னை திருமுல்லைவாயலில் தெருவில் தனியாக நடந்துச் சென்ற பி.டெக் கல்லூரி மாணவரை தாக்கி ஜி பே மூலமாக 29 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்ததாக 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூரைச் சேர்ந்த மாணவர் ஜெயதேவை கும்பல் ஒன்று மிரட்டி, அருகிலுள்ள பழைய கட்டடத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அங்கு பணம் கேட்டு மிரட்டி தலையில் பீர் பாட்டிலால் அடித்த கும்பல் அவரது 'ஜி.பே' செயலியின் பாஸ்வேர்டை பெற்று மற்றொரு எண்ணிற்கு பணம் அனுப்பி உள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த ஜெயதேவ் அளித்த புகாரில் அங்குள்ள சி.சி.டி.வி பதிவை ஆய்வு செய்து 5 பேரை போலீஸார் தேடி கண்டுபிடித்தனர்.
Read Entire Article