யுஜிசி ஊதியம் கோரி போராட்டம் கவுரவ விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

3 hours ago 1

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனும் நிலையில், அவர்களை அழைத்து அரசு பேச்சு நடத்துவது தான் முறையாகும். எனவே, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதை அரசு நிறுத்திக் கொண்டு, அவர்களை அழைத்து பேச்சு நடத்தி, ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

The post யுஜிசி ஊதியம் கோரி போராட்டம் கவுரவ விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article