அறிவிக்கக்கூடிய நோயாக புற்றுநோயை அறிவிக்க வேண்டும்: புற்றுநோயியல் நிபுணர்கள் கோரிக்கை

3 hours ago 1

சென்னை: உலக புற்றுநோய் தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக அப்போலோ மருத்துவமனையும், இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் , தமிழ்நாடு அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ‘யுனிஃபை டு நோட்டிஃபை’ என்ற தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கர் ஸ்ரீனிவாசன், சுரேஷ், பிரசாத் ஈஸ்வரன் ஆகியோரும் சங்ககளின் நிர்வாகி பாலசுந்தரம், ஐயப்பன்,கலைச்செல்வி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: அரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உட்பட, 15 மாநிலங்கள், அறிவிக்கக்கூடிய நோயாக புற்றுநோயை ஏற்கனவே அறிவித்திருக்கின்ற நிலையில், தேசிய அளவில் இதனை அமல்படுத்துவது இன்னும் அவசியமாக இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது 2025ம் ஆண்டுக்குள் 15.7 லட்சமாக உயரும். அரசின் சுகாதாரத்துறை கண்டிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் நிகழ்நேர தரவு சேகரிப்பையும் மற்றும் துல்லியமான தகவலளிப்பையும் இது உறுதி செய்யும்;

இதன்மூலம் இந்நோயின் அளவு மற்றும் வீச்செல்லை குறித்து ஒரு தெளிவான அறிவு சாத்தியமாகும். புற்றுநோய் சிகிச்சையில் துல்லியம், திறன் மற்றும் அணுகுவசதியை மேம்படுத்த முடியும். இது உலகளாவிய புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும். நோய் வராமல் தடுப்பதற்கு சிறப்பான உத்திகளை உருவாக்கவும் ஆராய்ச்சிக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது நமக்கு உதவும்.

The post அறிவிக்கக்கூடிய நோயாக புற்றுநோயை அறிவிக்க வேண்டும்: புற்றுநோயியல் நிபுணர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article