கல்குவாரி உரிமையாளரிடம் ரூ2 லட்சம் கேட்டு மிரட்டல்: நாதக நிர்வாகி 2 பேர் கைது

3 months ago 14

திருச்சி: திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி பெற்ற கல்குவாரியை மதுராபுரி கிராமத்தை சேர்ந்த தங்கவேல்(43) 5 ஆண்டு குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். கடந்த 3ம்தேதி காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் அருண்குமார்(32), மேற்கு தொகுதி செயலாளர் செல்லதுரை(35), உறுப்பினர் ராஜாங்கம்(32) மற்றும் ஒருவர் ஆகியோர் தங்கவேலிடம் சென்று அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி நடத்துவதாக கூறி ரூ2 லட்சம் தரும்படி கேட்டு மிரட்டி உள்ளனர்.

அவர் தரமறுக்கவே கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் கடந்த 4ம் தேதி கல்குவாரி அலுவலகத்திற்கு மீண்டும் சென்று தங்கவேலிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் தராததால், யூடியூப் சேனலில் கல்குவாரி பற்றி தவறாக கூறி, போராட்டம் நடத்த உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளனர். தங்கவேல் புகாரின்படி புலிவலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து செல்லதுரை, ராஜாங்கம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

The post கல்குவாரி உரிமையாளரிடம் ரூ2 லட்சம் கேட்டு மிரட்டல்: நாதக நிர்வாகி 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article