கல் குவாரிக்குள் பொதுமக்கள் நீராட செல்ல வேண்டாம்: கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தல்

1 week ago 3

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் சிறுவா்கள், பொதுமக்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. கல்குவாரிக்குள் நீராடுவதற்கோ, விளையாடுவதற்கோ, துணி துவைப்பதற்கோ மற்றும் கால்நடைகளை மேய்பதற்கோ பொதுமக்கள் யாரும் கல் குவாரிக்குள் செல்ல வேண்டாம்.

மாவட்ட நிர்வாகம் மூலம் இது தெரிவிக்கப்படுகிறது. கல்குவாரிக்குள் சென்று விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதாரம் ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் போலி பாஸ்போர்ட், போலி ஆதார் கார்டு போன்றவைகளுடன் நிறைய வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

The post கல் குவாரிக்குள் பொதுமக்கள் நீராட செல்ல வேண்டாம்: கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article