அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் அமைந்துள்ளது. இங்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் இன்று காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 1,030 காளைகள் மற்றும் 500 வீரர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்ககாசு, சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில், இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதனை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். போட்டியில் 600 மாடுபிடி வீரர்கள் 800 காளைகளுடன் போட்டியில் மல்லுக்கட்டினர்.
The post கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் 1030 காளைகள், 500 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு கோலாகலம் appeared first on Dinakaran.