கலப்பட வெல்லம் 500 கிலோ பறிமுதல்

3 weeks ago 6

 

திருப்பூர், ஜன.11: திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை விஜய லலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மடத்துக்குளம் வட்டம் சாமராயபட்டி, குமரலிங்கம், வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகள் 9 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கலப்படம் செய்யப்பட்டிருந்த 500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், வெல்லத்தில் செயற்கை வண்ணம் மற்றும் இதர வேதிப்பொருட்கள் ஏதேனும் கலப்படம் உள்ளதா? எனவும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது? பொதுமக்கள் உணவு பாதுகாப்பு சம்பந்தமான புகார்கள் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் தொிவிக்கலாம் என அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.

The post கலப்பட வெல்லம் 500 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article