கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க மந்திரி மீது வழக்கு

3 hours ago 4

 

போபால்,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர், ராணுவ கர்னல் சோபியா குரேஷி , விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

இந்நிலையில், மத்தியபிரதேச பா.ஜ.க. மந்திரி கன்வார் விஜய் ஷா கர்னல் சோபியா கருத்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மன்பூர் பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. மந்திரி விஜய் ஷா, மோடி நாட்டிற்காக பாடுபடுகிறார். பஹல்காம் தாக்குதலில் நமது மகள்களை கைம்பெண் ஆக்கியவர்களுக்கு பாடம் புகட்ட அவர்களின் மதத்தை சேர்ந்த சகோதரியை நாம் அனுப்பினோம். எங்கள் சகோதரியை கைம்பெண் ஆக்கினால் உங்கள் ஆடையை கழற்ற உங்கள் மதத்தை சேர்ந்த சகோதரியே வருவார்' என்றார்.

கர்னல் சோபியா குரேஷியை மேற்கோள்காட்டி அவதூறு கருத்து தெரிவித்த கன்வார் விஜய் ஷாவிற்கு கண்டனம் எழுந்த நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்புகேட்டார். அதேவேளை, கன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராணுவ கர்னல் குரேஷி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article