
சென்னை,
இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேம்பு'. இதில் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் அறிமுகமான ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷீலா நடித்துள்ளார்.
ஏ. குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணிகண்டன் முரளி இசையமைத்திருக்கிறார். எளிய மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.
இப்படம் வருகிற 23ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இயக்குனர் மாரிசெல்வராஜ் வெளியிட்டுள்ளார்.