
சென்னை,
நாட்டில் உள்ள ஐகோர்ட்டுகளில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், நீதி நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துவதற்கும், கடந்த ஏப்ரல் 16 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கூட்டத்தில் நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
இதன்படி, கர்நாடகா ஐகோர்ட்டின் 4 நீதிபதிகள் உட்பட 7 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.