சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன் -பிரதமர் மோடி

11 hours ago 4

அமராவதி,

ஆந்திரா மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது;- அமராவதி என்பது, இந்திரலோகத்தின் தலைநகரத்துப் பெயர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அமராவதி தற்போது ஆந்திராவின் தலைநகராகவும் உள்ளது. இது தற்செயலாக நடைபெற்ற நிகழ்வு இல்லை. இது, ஸ்வர்ணா ஆந்திரா (தங்க ஆந்திரா) உருவாகும் என்பதற்கான அறிகுறியாகும்.

நான் குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக தேர்வு செய்யபட்ட போது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை கூர்ந்து கவனிப்பேன். அவரது திட்டங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இன்று 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்கள் வெறும் கான்கிரீட் கட்டிடங்கள் மட்டும் அல்ல. ஆந்திர பிரதேசம் மற்றும் வளர்ந்த பாரதம் லட்சியங்களுக்கான வலுவான அடித்தளம் ஆகும். ஆந்திர பிரதேச மக்களுக்கும் இங்கு அமர்ந்து இருப்பவர்களுக்கும் மீண்டும் ஒரு உறுதியை நான் அளிக்கிறேன். ஆந்திராவின் வளர்ச்சிக்காக நீங்கள் எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம்" என்றார். 

Read Entire Article