
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்நிலையில்,ரெட்ரோ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவலை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெட்ரோ திரைபப்டம் முதல்நாளில் உலகமெங்கும் 46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை, நாளை மறுதினம் வார விடுமுறை என்பதால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.