பெங்களூரு: கர்நாடக மாநில அரசு துறையில் பணியில் சேருவோருக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் சில மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசு துறையில் பணியில் சேரும் சிலர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு வழங்கப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு பெற்று பணியில் சேர பிற வகுப்பை சேர்ந்தவர்கள் தங்களை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் என்ற கூறி போலி சாதி சான்றிதழ் பெற்று பணியில் சேருவதால், உண்மையான பயணிகள் அரசு வேலை கிடைக்காமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
இது தொடர்பாக மாநில சமூக நலம் மற்றும் வருவாய்துறைகளுக்கு புகார் வந்துள்ளதை தொடர்ந்து சாதி சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல் முறையை மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் அரசு பணியில் சேருவோருக்கு சாதி சான்றிதழை வருவாய்துறை நேரடியாக வழங்காமல் பொது உரிமை அமலாக்க பிரிவு (டிசிஆர்ஐ) விசாரணை நடத்தி, பயனாளி இந்த சாதியை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்து கடிதம் கொடுத்த பின்னர் மாவட்ட கலெக்டரின் பரிசீலனை முடித்து தாலுகா தாசில்தார்கள் சாதி சான்றிதழ் மற்றும் சிந்துத்வா சான்றிதழ் வழங்க வேண்டும்.
மேலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் வாழ்வியல் உரிமையை பறிக்கும் வகையில், போலி சாதி சான்றிதழ் பெற்று வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்துள்ளதாக புகார் வந்தால், அரசியலமைப்பு சட்டம் 7 (4) வது பிரிவின் கீழ் பொது உரிமை அமலாக்க பிரிவுக்கு புகார் அல்லது சிபாரிசு செய்தால், அப்பிரிவினர் நேரடியாக சென்று சம்பந்தப்பட்டவர் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதை விசாரணை நடத்தி உறுதி செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதலில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
The post கர்நாடக மாநிலத்தில் போலி சாதி சான்றிதழ் பெறுவதை தடுக்க புதிய திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.