செங்கல்பட்டு: கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து, அதிகளவு கரும்புகையை கக்குகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள், தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், ‘அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுதில்லை. இதனால் அதிகளவு கரும்புகையை வெளியேற்றி வருகிறது. மேலும், அப்பேருந்து எந்த நேரத்தில் எங்கு நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் டிரைவர், கண்டக்டர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த கரும்புகை மூலமாக பயணிகள் மற்றும் சக வாகன ஓட்டிகளுக்கு கடும் மூச்சுத்திணறலுடன் பல்வேறு சுவாசக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. எனவே, பேருந்துகளை முறையாக பராமரிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகின்றனர்.
The post கரும்புகை கக்கும் அரசு பேருந்து appeared first on Dinakaran.