கருங்கல்: கருங்கல் அருகே பாலவிளையில் பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. நேற்று காலை கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு வந்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு ெபாருட்கள் சிதறி கிடந்தன. ஏற்கனவே பலமுறை இந்த கோயில்களில் திருட்டு நடந்ததால் கண்காணிப்பு ேகமராக்கள் போருத்தப்பட்டிருந்தது. இதில் பதிவான காட்சிகளை பார்த்தபோது நேற்று அதிகாலை 4 மணிக்கு கையில் ஆயுதத்துடன், முகமூடி அணிந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கோயில் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்தார். அவர் இசக்கியம்மன் கோயில் சன்னிதியில் உள்ள உண்டியலை உடைக்க முயன்றார்.
அது பெரிய உண்டியல் என்பதால் அதை உடைக்க முடியவில்லை. இதையடுத்து பத்ரேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்ற அந்த நபர் கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வது பதிவாகியிருந்தது. உண்டியலில் சுமார் ரூ5 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து கோயில் தலைவர் பிரேம்சிங் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த கோயிலில் திருட்டுகள் நடந்ததால் நகைகளை கோயில் வளாகத்தில் பாதுகாப்பான அறையில் லாக்கர் வசதி செய்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனால் சுமார் ரூ50 லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியதாக கூறப்படுகிறது.
திருட்டு வழக்கில் அலட்சியம்
கருங்கல் பகுதியில் ஏற்கெவே பல கோயில்களில் திருட்டுகள் நடந்துள்ளன. மேலும் பைக் திருட்டு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக பல புகார்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் புகார்தாரர்களை அலைய விடுகின்றனர். வற்புறுத்தி வழக்குப்பதிவு ெசய்ய கோரினால் மனு ரசீது மட்டும் பதிவு செய்கின்றனர். பின்னர் அதை கிடப்பில் போடுகின்றனர் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்காததுடன் திருட்டு கும்பல் அச்சமின்றி கை வரிசையை காட்டி வருகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
The post கருங்கல் அருகே கோயில் உண்டியலை பெயர்த்து சென்ற திருடன்: லாக்கரில் இருந்ததால் ரூ50 லட்சம் நகை தப்பியது appeared first on Dinakaran.