கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ தெப்ப உற்சவம்

2 weeks ago 6

பொன்னேரி திருவாயர்பாடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றுவருகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள், வாகன சேவைகள் நடைபெறுகின்றன.

விழாவின் 11-ம் நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவில் திருக்குளத்தில் வண்ணமலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் கரி கிருஷ்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி, மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Read Entire Article