'கராத்தே பாபு' டீசரை பார்த்து சேகர்பாபு செய்த போன் கால்..'' - மேடையில் ரகசியம் உடைத்த ரவி மோகன்

2 days ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படம் குறித்து அமைச்சர் சேகர் பாபு உடன் பேசிய கலகலப்பான உரையாடலை நடிகர் ரவி மோகன் பகிர்ந்தார்.

சென்னை எழும்பூரில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு திரைப்படத்தின் டீசர் வெளி வந்தபோது செல்போனில் அழைத்த அமைச்சர் சேகர் பாபு, சற்று நேரம் பேசி விட்டு தாம்தான் கராத்தே பாபு என்று கூறியதாக தெரிவித்தார்.

Read Entire Article