
'90ஸ் கிட்ஸ்களின் நாயகான திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கிடையில் தற்போது ஜாக்கி சான் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹாலிவுட் சண்டை காட்சிகள் இப்போது கிராபிக்ஸை நம்பி இருப்பதால், அவற்றில் உண்மைத் தன்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது, ''நாங்கள் ஆக்ஷன் படங்களில் நடித்த போது எங்களுக்கு இருந்த ஒரே வழி, களத்தில் இறங்குவதுதான். ஆனால், இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் நடிகர்கள் எதையும் செய்ய முடியும். ஆனால் அதில் யதார்த்தம் இல்லை என்பதை உணர முடிகிறது'' என்று தெரிவித்துள்ளார்.