
சென்னை,
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 29,30ம் தேதி ஆகிய நாட்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது
இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 29., 30 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், மாவட்டப் பொறுப்பாளர்களும்; மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது .