கம்பம், மார்ச் 29: கம்பம் நகராட்சி கூட்டரங்கில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக தமிழக மற்றும் கேரள வருவாய் துறை அதிகாரிகள், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தேனி அல்லிநகரத்தில் 26 மெட்ரிக் டன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரைஸ்மில்களிலும் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்படுவதை கண்காணிக்கவும், அரிசி கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும், தொலைபேசி எண்கள், சந்தேகப்படும் வாகனங்கள் மற்றும் நபர்கள் உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவும், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கூட்டாக சோதனை நடத்தும் போது பரஸ்பரம் உதவி செய்தல், கடத்தல் ரேஷன் அரிசி வாங்குபவர்களின் விபரங்களை சேகரித்து, தமிழ்நாடு போலீசாருக்கு வழங்க கேரளா அதிகாரிகள் ஒத்துழைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
The post கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு: இருமாநில ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.