கமுதி, பிப்.24: தமிழக அரசால் நெடுஞ்சாலையில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, மாவட்ட இதர சாலையில் ஆண்டு தோறும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் சிறப்பு பழுது பார்த்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கமுதி நெடுஞ்சாலைத் துறையில், முதுகுளத்தூரில் இருந்து கமுதி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-25-ன் கீழ், 2.4 கி.மீ தூரம் 1.20 கோடி மதிப்பீட்டிலும்,சிறப்பு பழுது பார்த்தல் 2024-25 திட்டத்தின் கீழ், 2.6 கி.மீ தூரம் 1.20 கோடி மதிப்பீட்டிலும் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து முடிந்தது.
இந்த பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து மதுரை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் முருகன், கமுதி உட்கோட்ட பொறியாளர் சக்திவேல், ராமநாதபுரம் தரக்கட்டுப்பாடு உட்கோட்ட பொறியாளர் ரங்கபாண்டி, இளநிலை பொறியாளர் முருகன்,மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
The post கமுதி அருகே நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.