![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39079309-chennai-03.webp)
சென்னை,
விஜய்க்கு பணக்கொழுப்பு என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதற்கு தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் பதில் அளித்து கூறியதாவது:-
நடைமுஏஐ அரசியல் யதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை. சமகால சமூக சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பது அவசியம். ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே வியூகமாக கொண்டவர் சீமான் திரள் நிதி பெறும் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனை பெறுவது தவறாக தெரிவதில் ஆச்சரியமில்லை.
ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவதுதான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி என எத்தனை காலம் கூறிக் கொண்டிருப்பார் சீமான். சீமானோடு என்றும் தங்களுக்கு ஒத்துப்போகாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.