'தொண்டர்களை நம்பித்தான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது' - கனிமொழி எம்.பி.

2 hours ago 1

விழுப்புரம்,

விழுப்புரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரபல தேர்தல் வியூக ஆலோகர் பிரசாந்த் கிஷோர் த.வெ.க.வுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். முன்னதாக பிரசாந்த் கிஷோர் 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிய நிலையில், தற்போது த.வெ.க.வுடன் இணைந்துள்ளார். இது குறித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது;-

"தேர்தல் வியூக நிபுணர்கள் தொழில்முறை அடிப்படையில் வேலை செய்பவர்கள். அவர்களை யார் அழைக்கிறார்களோ அவர்களுடன் சென்று பணியாற்றுவார்கள். தொண்டர்களை நம்பித்தான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது. முதல்-அமைச்சர் எந்த வழியை காட்டுகிறாரோ, அந்த வழியில் செயல்பட தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு எந்தவித சிக்கலும் கிடையாது."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார். 

Read Entire Article