கமல்ஹாசனின் 237-வது பட அப்டேட்!

1 month ago 13

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5 தேதி வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து கமல் பா.ரஞ்சித் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கமல் தனது 237-வது படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.

இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான படிப்பை கற்றுக்கொண்டுள்ளார். இதனால் படத்தில் ஏஜ தொழில்நுட்பம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், கமலின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, ஆக்சன் கதைக்களத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பிரீ புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தினை நடிகர் கமல்ஹாசனே தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article