கமல், மணிரத்னத்துடன் தீபாவளி கொண்டாடிய சித்தார்த்- அதிதி ராவ் தம்பதி

2 months ago 14

சென்னை,

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். நடிகை அதிதி ராவ் செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிட்சயமானவர்.


இதற்கிடையே, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதைதொடர்ந்து, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் மற்றும் குடும்பத்தினருடன் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article