
சென்னை,
பிசியான நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'ரெட்ரோ' படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக பூஜா ஹெக்டே கூறி இருந்தார். இது அவரது டோலிவுட் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது.
இதற்கிடையில், கிச்சா சுதீப்புக்கு ஜோடியாக 'பிஆர்பி: பர்ஸ்ட் பிளட்' (பில்லா ரங்கா பாஷா) படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் பூஜா ஹெக்டே கன்னடத்தில் அறிமுகமாகும் படமாக இது அமையும். அனுப் பண்டாரி இயக்கும் 'பிஆர்பி: பர்ஸ்ட் பிளட்' படத்தை அனுமான் பட தயாரிப்பாளர்கள் நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கிறார்கள்.